குப்பைமேனி மருத்துவ பயன்கள் - Kuppaimeni Medicinal Uses

குப்பைமேனி மருத்துவ பயன்கள் - Kuppaimeni Medicinal Uses


குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : குப்பைமேனி மூலிகையின் மகத்துவத்தை காணும் முன், குப்பைமேனியைப் பற்றி சிறு குறிப்பை காணலாம்.

குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த குப்பைமேனியைப் பற்றி நன்றாக தெரியும். நகர மற்றும் பெரு நகரங்களில் வசிக்கும் பெரும்பாலோருக்கு குப்பைமேனியை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் இந்த செடியை தினமும் கடந்து சென்றுகொண்டுதான் இருக்கின்றோம்.



குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : சாலை ஓரங்களிலும், குப்பைமேடுகளிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய மூலிகைதான் இந்த குப்பைமேனி. பெரும்பாலானோர் இந்த செடியை கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள், ஆனால் இதுதான் குப்பைமேனி என்று தெரியாமல் இருக்கலாம்.


குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை


குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : குப்பைமேனி, களைச்செடியாகவும் பெரும்பாலோரால் கைவிடப்பட்ட செடியாகவும் இன்று இருப்பது வருத்ததிற்குரியது. பலவகைப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக திகழும் குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு.

குப்பைமேனியின் சிறப்புகள்


குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களும் சிறப்பு வாய்ந்தது என்றபோதிலும் இதன் இலையில் இருந்து கிடைக்கும் சாறு மிகச்சிறப்பு வாய்ந்தது. குப்பைமேனி பலவகைப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அவை என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.


குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து உட்கொள்வதனால் சளி, வறட்டு இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

உடல் உஷ்ணத்தை சரி செய்யலாம்.

குப்பைமேனி சாறு வயிற்றில் உள்ள புழுக்கள், குடல் புழுக்கள் ஆகியவற்றை அழிக்கும் தன்மை உடையது.


குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : குப்பைமேனி இலை சாறு உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சைனஸ் எனப்படும் நோய்க்கு சிறந்த மருந்து, இரத்த அழுத்தத்தால் உண்டான வாத நோய் குணமாகும், Allergy என்று சொல்லக்கூடிய ஒவ்வாமை நோய் சீராகும்.

குப்பைமேனி சாறு உட்கொள்ளும் போது சிலருக்கு குமட்டல் அல்லது வாந்தி உண்டாகலாம்.

குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : சொத்தைப் பல் உள்ளவர்களுக்கு பல்லில் வலி ஏற்படும் போது இரண்டு அல்லது மூன்று குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி சொத்தைப்பல்லில் வைத்தால் சொத்தைப்பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும்.

படை, சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவிவர நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். தீயினால் ஏற்பட்ட புண்களும் விரைவில் குணமாகும்.




சர்கரைப்புண் உள்ளவர்கள் தினமும் குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து புண்ணில் பூசிவர புண் ஆறும்.

குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : வயதான பெரியோர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு உண்டாகும் படுக்கைப்புண் உள்ளவர்கள், குப்பைமேனி இலையுடன் சிறிது வேப்ப எண்ணெய் கலந்து அரைத்து புண்களில் பூசிவர படுக்கைப்புண் நீங்கும்.

தேள், பூரான், விஷபூச்சி கடித்தால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறியும்.



குப்பைமேனி இலை பொடி தயாரிப்பது எப்படி?



குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : குப்பைமேனி செடியை வேருடன் எடுத்து வந்து வீடுகளில் வளர்க்கலாம். குப்பைமேனி அடிக்கடி கிடைக்கப்பெறாதவர்கள், குப்பைமேனி இலைகளை நிறைய பறித்து கொண்டு வந்து அதனை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். ஆனாலும் குப்பைமேனியை பச்சையாக உபயோகிப்பது சிறந்தது.

முடிவுரை


குப்பைமேனி மருத்துவ பயன்கள் - kuppaimeni medicinal uses : பலவகைப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படும் குப்பைமேனியை பயன்படுத்தி நோயில்லா வாழ்வை வாழ்வோம்.


Inspirational Quote Images

Pongal festival Images and GIFs


தொடர்ந்து பல பதிவுகளை காண நம்முடன் இணைந்திருங்கள்

குப்பைமேனி மருத்துவ பயன்கள் - Kuppaimeni Medicinal Uses குப்பைமேனி மருத்துவ பயன்கள் - Kuppaimeni Medicinal Uses Reviewed by Admin on December 01, 2019 Rating: 5

3 comments:

  1. குப்பைமேனி செடியின் ஆங்கில மற்றும் விஞ்ஞான (scientific) பெயர் என்ன?

    ReplyDelete

Powered by Blogger.