Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள்

Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள்



Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் : சித்த மருத்துவத்தில் கடுக்காய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நமது முன்னோர்கள் கடுக்காயை பத்து தாய்களுக்கு ஈடானது என கூறி இருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஓர் அறிய மூலிகை இந்த கடுக்காய்.




Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் : நம் உடல் ஆரோக்கியமாக இருக்க அறுசுவையையும் உட்கொள்ளவேண்டியது அவசியம். கடுக்காயில் உப்பை தவிர மற்ற ஐந்து சுவைகளும் உள்ளன. இதில் முக்கியமானது துவர்ப்பு சுவை. கடுக்காயில் உள்ள துவர்ப்பு சுவை நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்கிறது. கடுக்காய் நம் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றுகிறது. மேற்சொன்ன இந்த இரண்டும் நடந்தாலே நம் உடல் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.




கடுக்காயை யார் உட்கொள்ளக்கூடாது.


கர்பிணிப்பெண்கள் கடுக்காயை உட்கொள்ள கூடாது.

கடுக்காயினால் ஏற்படும் நன்மைகள்



Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் : கடுக்காயை உட்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை சீராகி உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறும். உணவு நஞ்சாதல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். கடுக்காயை உட்கொள்வதால் நாக்கில் சுவையின்மை, உடல் பருமன், வாய்ப்புண், குடல்புண், ஆசனவாய் புண் போன்ற உடலின் உட்புறம் உண்டாகும் அனைத்து புண்களும் சரியாகும். பித்த நோய்கள், இரத்தகோளாறுகள், படை, தேமல் போன்ற தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரகுழாயில் ஏற்படும் எரிச்சல், கல்லடைப்பு, மூலம், மூட்டு வலி, உடல் பலவீனம், கண்பார்வை கோளாறு, காது கேளாமை, நரம்பு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும். புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும்.


கடுக்காய் பொடி தயாரிப்பது எப்படி?



Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் : கடுக்காய் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் சுலபமாக கிடைக்கும். கடுக்காயை வாங்கிவந்து அதன் உள்ளே உள்ள கொட்டையை நீக்கி (கடுக்காயின் கொட்டையை உட்கொள்ள கூடாது. அது சிறிது நஞ்சு தன்மை உடையது) அதன் தோலை மட்டும் வெய்யிலில் காயவைத்து, அரைத்து பொடியாக்கி சலித்து காற்று புகாத ஜாடியில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.


கடுக்காய் பொடியை எப்படி உட்கொள்வது?


Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் : இரவு உணவு உண்ட பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடியை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.  இப்படி குறைந்தது 48 நாட்களாவது உட்கொண்டு வந்தால் நம் உடல் எந்த நோயுமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

முடிவுரை


Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் : பத்து தாய்களுக்கு ஈடான கடுக்காயை பயன்படுத்தி நோயில்லா வாழ்வை வாழ்வோம்.





Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் Kadukkaai - கடுக்காய் பொடியின் மருத்துவ குணங்கள் Reviewed by Admin on November 24, 2019 Rating: 5

3 comments:

  1. Such a wonderful information, i loved it, going to follow from today

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comments. Will update more posts like this.

      Delete
  2. What a wonderful medicine really I loved this we will follow the same

    ReplyDelete

Powered by Blogger.